Video: திமுக தலைவர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய்

Udhayanidhi Stalin Vijay M K Stalin DMK Thamizhaga Vetri Kazhagam
By Yashini May 11, 2026 10:33 AM GMT
Report

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராக பதவியேற்றார்.

பதவியேற்ற உடனே முக்கியமான மூன்று திட்டங்களில் கையெழுத்திட்ட அவர், சட்ட ஒழுங்கு தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் தனது கொள்கைத் தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Video: திமுக தலைவர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய் | Vijay Meets Mk Stalin At His Residence

இந்நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகரன் தேர்வு செய்யப்பட்டு மனு தாக்கல் செய்தார்.

இதற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்றார்.

Video: திமுக தலைவர் மு. க ஸ்டாலினை நேரில் சந்தித்த முதலமைச்சர் விஜய் | Vijay Meets Mk Stalin At His Residence  

அங்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யை ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர், மு.க. ஸ்டாலின் விஜய்யை அன்புடன் வரவேற்று இருவரும் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

மேலும், "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" என்ற தலைப்பு கொண்ட புத்தகத்தை முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பரிசளித்தார்.