பயப்படுற ஆள் நான் இல்லை: தவெக தலைவர் விஜய் (வீடியோ)
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹொட்டல் ஒன்றில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
தவெக தலைவர் விஜய் தலைமையிலான இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.
விஜய் பேசியதாவது, அரசியலுக்கு வந்த பிறகும் சரி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகும் சரி இதற்கு முன்னாடி இருந்தவர்கள் போலவும் தற்போது இருப்பவர்கள் போலவும் ஊழல் செய்யமாட்டோம், அதை நான் தொட மாட்டேன்.
எதுக்கும் ஆசைப்படாத ஒருவன் அரசியலுக்கு வருகிறான் என்றால் அவன் கண்முன்னாடி தவறு நடந்தால் அதனை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோன்.
அழுத்தம் எனக்கு கொடுக்கப்படுகிறதா என்றால் இருக்கு, ஆனால் எனக்கில்லை மக்களுக்கு, அழுத்தத்துக்கு பயப்படுகிற ஆள் நான் இல்லை.
எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போவதற்கும் அடிமையாக இருப்பதற்கும் அரசியலுக்கு நான் வரவில்லை, மக்களை பாதுகாக்கவே வந்துள்ளேன் என பேசியுள்ளார்.
மேலும் மக்களுக்கு தன் மேல் மட்டும் நம்பிக்கை இருந்தால் போதாது, தன்னுடன் இருக்கும் தோழர்கள் மீதும் நம்பிக்கை இருக்க வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.