அந்த ஒரு காரணத்துக்காக பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

Vijay Ponniyin Selvan: I Mani Ratnam
By Nandhini Jul 12, 2022 02:15 PM GMT
Report

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

வரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்தது. தற்போது இப்படத்தின் போஸ்டர் அடுத்தடுத்து வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

vijay

வாய்ப்பை தவற விட்ட நடிகர் விஜய்

பொன்னியின் செல்வன் படத்தை 12 ஆண்டுகளுக்கு முன்பு மணிரத்னம் இயக்க முயற்சித்தபோது முதலில், நடிகர் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டார். இதில் அவர் வந்தியத்தேவன் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இதில் கமிட் ஆகிவிட்டால் இப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது, அதிக நாள் கால்ஷீட் தர வேண்டும் என்று மணிரத்னம் கூறியதால், இது நமக்கு செட் ஆகாது என்று நடிகர் விஜய் விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடற்கரையில் உள்ளாடை தெரியும்படி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே - வைரலாகும் புகைப்படம்