ரூ.9000 கோடி.. விஜய் மல்லையா மகனுக்கு திருமணம் - பொண்ணு யார் தெரியுமா?

India Actors Bollywood Marriage Actress
By Jiyath Jun 24, 2024 07:14 AM GMT
Report

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகனும், நடிகருமான சித்தார்த்த மல்லையா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார். 

விஜய் மல்லையா

விமான நிறுவனம், மதுபான உற்பத்தி என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வந்தவர் விஜய் மல்லையா. இதன் மூலம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களும் ஒருவராகவும் அவர் இருந்தார். இதனிடையே இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றார்.

ரூ.9000 கோடி.. விஜய் மல்லையா மகனுக்கு திருமணம் - பொண்ணு யார் தெரியுமா? | Vijay Mallya Son Sidhartha Mallya Got Married

இதனையடுத்து அதனை திருப்பித்தர இயலாமல் பிரிட்டனுக்கு தப்பியோடினார். இதனை தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

ஷமியுடன் திருமணம்.. பரவிய புகைப்படம் உண்மையா? சானியா மிர்சா விளக்கம்!

ஷமியுடன் திருமணம்.. பரவிய புகைப்படம் உண்மையா? சானியா மிர்சா விளக்கம்!

சித்தார்த் - ஜாஸ்மின்

இந்நிலையில் அவரது மகனும், பாலிவுட் நடிகருமான சித்தார்த் மல்லையாவுக்கு (37) லண்டனில் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது காதலியான ஜாஸ்மின் என்பவரை அவர் கரம் பிடித்துள்ளார். இவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரூ.9000 கோடி.. விஜய் மல்லையா மகனுக்கு திருமணம் - பொண்ணு யார் தெரியுமா? | Vijay Mallya Son Sidhartha Mallya Got Married

சித்தார்த் - ஜாஸ்மின் ஜோடிக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.