பெண்களை வைத்து பாலியல் தொழில் - விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது!
விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் தொழில்
திருச்சி மாநகர் கருமண்டபம் சிங்கராயர் பகுதியில் ஸ்பா ஒன்றில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக திருச்சி பாலியல் தொழில் தடுப்புப் பிரிவுக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் ஸ்பாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்குள்ள வீட்டில் ஷைன் ஸ்பா என்ற பெயரில் கர்நாடகத்தைச் சேர்ந்த லட்சுமி தேவி என்பவரும் இரண்டு பெண்களும் இருந்தனர். அந்த வீட்டில் உள்ள பொருட்களை போலீசார் சோதனை செய்தனர். விசாரணையில் ஸ்பா சென்டர் உரிமை பெறாமல் நடந்து வருவது தெரியவந்தது. இந்நிலையில் அங்குள்ள இரண்டு பெண்களையும் மீட்ட போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ஸ்பாவின் மேலாளர் லட்சுமி தேவியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர்தான் இந்த ஸ்பாவின் உரிமையாளர் எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி
கைது இதையடுத்து செந்தில் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். செந்தில் தலைமறைவாக இருந்ததால் போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவரை கண்டுபிடித்த போலீசார் கைது செய்தனர்.
இந்த ஷைன் ஸ்பாவின் உரிமையாளர் செந்தில், விஜய் மக்கள் இயக்க திருச்சி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.