நான்.. ரெடிதான் வரவா..! நடிகர் விஜய்யின் அரசியில் கட்சி குறித்த புதிய தகவல்!

Vijay Tamil Cinema Tamil nadu Thalapathy Vijay Makkal Iyakkham Tamil Actors
By Jiyath Feb 02, 2024 08:00 AM GMT
Report

நடிகர் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அரசியல் கட்சி 

நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கான விஜய் மக்கள் இயக்க பொதுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

நான்.. ரெடிதான் வரவா..! நடிகர் விஜய்யின் அரசியில் கட்சி குறித்த புதிய தகவல்! | Vijay Makkal Iyakkam Official Announcement Today

அதில் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

வெளியான தகவல் 

இதற்கிடையில் புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என தகவல் வெளியானது.

நான்.. ரெடிதான் வரவா..! நடிகர் விஜய்யின் அரசியில் கட்சி குறித்த புதிய தகவல்! | Vijay Makkal Iyakkam Official Announcement Today

இந்நிலையில், கட்சியின் பெயரை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்ட நொடியில் இருந்து கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.