‘எந்த கூட்டணியும் கிடையாது... எந்த ஆதரவும் கிடையாது...’ - விஜய் மக்கள் இயக்கம் அதிரடி!

actor vijay Notice Vijay makkal Iyakkam
By Nandhini Feb 08, 2022 04:31 AM GMT
Report

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் 19ம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,மதிமுக ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சி தேர்தல் களத்தில் போட்டியிட உள்ளது.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறது.

பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிட் உள்ளன. இவர்கள் மட்டுமின்றி நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் இத்தேர்தலை சந்திக்க இருக்கிறது.

இந்நிலையில், அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

"தமிழ்நாட்டில் நடைபெறும் 2022ஆம் ஆண்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவின் படி, தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி, ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள், அனைத்து மாவட்ட தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய நகர பகுதி தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து, தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம், செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சேர்த்து, நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   

‘எந்த கூட்டணியும் கிடையாது... எந்த ஆதரவும் கிடையாது...’ - விஜய் மக்கள் இயக்கம் அதிரடி! | Vijay Makkal Iyakkam Notice