சட்டத்தை கையில் எடுக்கும் விஜய் - வெளியான அதிரடி அறிவிப்பு
அரசியலில் விரைவில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய் தொடர்ந்து பல அதிரடி முனைப்புகளை எடுத்து வருகின்றனர்.
கட்சியாக மாறும் மக்கள் இயக்கம்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவை கடந்து பல்வேறு மொழிகளிலும் நல்ல ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் தான் தற்போது விஜய் அரசியலில் கால் பதிக்கவுள்ளார் என்ற செய்திகள் வேகமாக பரவி வருகின்றது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜயும், அண்மையில் கல்வி விழா ஒன்று நடத்தியது மட்டுமின்றி அதில் அரசியலும் பேசி, அந்த கருத்துக்களுக்கு வலு சேர்த்தார்.
இலவச சட்ட ஆலோசனை
மேலும், இரவு பட சாலை ஒன்று அண்மையில் துவங்கிய நிலையில் தான், தற்போது விஜய் மக்கள் இயக்க சார்பில் அடுத்த அறிவிய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, விஜய் மக்கள் இயக்க சார்பில் தற்போது மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான மையங்களும் விரைவில் தோற்றுவிக்கப்படவுள்ளன என தெரிகிறது.
இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.