விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு : நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவிப்பு
விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாக தெரிவித்துள்ளார்.
தனது பெயரை பயன்படுத்தி தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்பொழுது விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பிப்ரவரி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்தாண்டு நவம்பர் மாதம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராகத் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதேசமயத்தில் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த நடிகர் விஜய், தனக்கும் இதற்கும் தொடர்பே இல்லை எனக்கூறியதோடு, தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கட்சி செயல்பாடுகளில் ஈடுபடவும் தடை விதிக்கக்கூறி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் யாரும் ஆஜராகாததால், விசாரணையைச் செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மேலும் பதில் மனுவைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது, அப்பொழுது, நடிகர் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், கடந்த பிப்ரவரி பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பதாகவும், அதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.