மீண்டும் இணையும் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி - காத்திருக்கும் சர்பிரைஸ், உற்சாகத்தில் ரசிகர்கள்!!

Swetha Subash
in திரைப்படம்Report this article
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் தான் மாஸ்டர்.
நடிகர் விஜய்யுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் மாஸ்டர் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டாக்டர் புகழ் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய் .
பீஸ்ட் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியிடப்பட்ட அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சூப்பர் ஹிட் அடித்து இணையத்தை கலக்கி வருகிறது.
மேலும் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்தாக தமிழில் 'தோழா' படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
வம்சி இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கப்படாத நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.
அந்த வகையில் அடுத்த படத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் தற்போது கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.