அதுமட்டும் உண்மையாக இருந்தால்.. அதிமுக கூட்டணிக்கு விஜய் வரணும்!
அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என கே.டி.ராஜேந்திர பாலாஜி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக கூட்டணி
சிவகாசியில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"விஜய் தனித்து நின்று போட்டியிட்டால், தி.மு.க. தமிழக வெற்றிக் கழகத்தை அழித்துவிடும்" என்று எச்சரித்த அவர், தி.மு.க.வை எதிர்க்கும் நோக்கம் விஜய்க்கு உண்மையாகவே இருந்தால், அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து, தி.மு.க.வை இணைந்து எதிர்க்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
ராஜேந்திர பாலாஜி அழைப்பு
அ.தி.மு.க.வின் பலம் மற்றும் அரசியல் அனுபவம் விஜய்க்குத் தேவை. விஜய்க்கு கூடும் கூட்டம் எல்லாம் வாக்குகளாக மாறாது. அவர் ஒரு நடிகர் என்பதால், அவரைப் பார்க்க நாங்கள் கூடச் செல்வோம். டிகர் அஜித், ரஜினிகாந்த் போன்றோர் அரசியல் களத்திற்கு வந்தால்,
விஜய்க்கு வரும் கூட்டத்தைவிட இருமடங்கு கூட்டம் அதிகமாக வரும். நடிகர் என்ற பிம்பம் மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தராது, அரசியல் என்பது வேறு. தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கும், தவெக-வுக்கும் மட்டுமே போட்டி என விஜய் கூறுவது உண்மைதான்.
ஆனால், அவர் இரண்டாவது இடத்திற்குத்தான் இரு கட்சிகளுக்கும் போட்டி என்பதைத்தான் சொல்கிறார். அ.தி.மு.க.வின் வலுவான அடித்தளம், தொண்டர்கள் பலம் மற்றும் மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு ஆகியவை தி.மு.க.வை வீழ்த்தும் ஆற்றல் கொண்டது’ என்று தெரிவித்துள்ளார்.