விஜய் செய்யும் சம்பவம்.. தடபுடலாக நடக்கும் விருந்து ஏற்பாடு - யார் யாருக்கு தெரியுமா?
விவசாயிகளுக்கு விருந்து வைக்கபோவதாக விஜய் முடிவுசெய்துள்ளார்.
விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தவெக தலைவர் விஜய், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சி கொள்கை எதிரி, அரசியல் எதிரி குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும்.
அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு இலவசமாக பசுமாடு, கன்றுகுட்டியை தவெக நிர்வாகிகள் வழங்கினர்.
விருந்து
இந்த நிலையில், தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் , நாளை விருந்து அளிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நாளை, வி.சாலை நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் அவர் குடும்பத்தினருடன் விருந்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை காலை 10 மணியளவில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. தவெகவின் முதல் மாநாட்டிற்கு இடம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.