திமுகவின் பிடியில்தான் தவெக...நடிகர் விஜய் ஒரு இலவச இணைப்பு - ஹெச். ராஜா விமர்சனம்!

Vijay BJP H Raja Thamizhaga Vetri Kazhagam
By Swetha Sep 21, 2024 10:33 AM GMT
Report

தி.மு.க.,வுக்கு ஊதுகுழலாக நடிகர் விஜய் வந்துவிட்டார் என்று ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

ஹெச். ராஜா

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பா.ஜ., மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறியதாவது, கட்சிக்கு நடிகர் விஜய் வெற்றிக்கழகம் என்று வைத்திருந்தாலும், தி.மு.க.,வுக்கு ஊதுகுழலாக இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது.

திமுகவின் பிடியில்தான் தவெக...நடிகர் விஜய் ஒரு இலவச இணைப்பு - ஹெச். ராஜா விமர்சனம்! | Vijay Is A Free Product For Dmk Says H Raja

அதனால் தான் ஈ.வெ.ரா., சிலைக்கு விஜய் மாலை போட போனார் என்பதையே காட்டுகிறது.அவரது கட்சியின் மாநாட்டுக்கு எல்லா விதமான நிபந்தனைகளை போட்டு, அனுமதியே கொடுக்காமல் இருந்தனர். ஆனால் தற்போது அனுமதி கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர்.

நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு மாநாடு நடத்துவதாக இருந்தால் சினிமா தான் பண்ண வேண்டும். அரசியல் பேச முடியாது, அவ்வளவு நிபந்தனைகள் அவருக்கு போடப்பட்டு உள்ளது. ஒரு விஷயம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

யோசிக்கனும்..வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக பேசக்கூடாது - ஹெச்.ராஜா காட்டம்!

யோசிக்கனும்..வார்த்தைகள் இருக்கிறது என்பதற்காக பேசக்கூடாது - ஹெச்.ராஜா காட்டம்!

இலவச இணைப்பு

திராவிடத்துக்கு எதிரான இருப்பிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே பா.ஜ.,வின் நோக்கம். தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் நின்றால் யாருடைய வாக்குகளை அவர்கள் பிரிக்க முடியும். நடிகர் விஜய், தி.மு.க.,வின் ஒரு பிற்சேர்க்கை தான். எங்களுக்கு மகிழ்ச்சி தான்.

திமுகவின் பிடியில்தான் தவெக...நடிகர் விஜய் ஒரு இலவச இணைப்பு - ஹெச். ராஜா விமர்சனம்! | Vijay Is A Free Product For Dmk Says H Raja

ஏன் என்றால் அவர் எங்களுக்கு எதிரானவர்களின் ஓட்டுக்களை தான் பிரிக்க போகிறார். ஈ.வெ.ரா., சிலைக்கு மாலை போட்டதால் அவரது மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருக்கலாம்.

இந்த அரசியலுக்கு மாற்றை கொடுக்க வேண்டும் என்பதுதான் நடிகர் விஜய்யின் நோக்கம் என்றால், கொள்கையில் மாற்றம் வேணுமே? தி.மு.க.,வின் அதே கொள்கையை அவர் சொல்லிக் கொண்டு இருந்தால் மக்கள் உங்களை மாற்றாக கருதமாட்டார்கள்.

காங்கிரஸ் போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.,வின் இலவச இணைப்புகள் தானே. அதுமாதிரி நடிகர் விஜய்யும் இலவச இணைப்பாய் இருப்பார் என்று நம்புகிறேன். என்று தெரிவித்துள்ளார்.