யார் அந்த 234 வேட்பாளர்கள்? இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்
முதன்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ள தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
இதற்கான வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கிறார்.
சென்னையில் நட்சத்திர விடுதியில் இந்நிகழ்வு நடைபெறுகிறது, அத்துடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நாளை பெரம்பூர் தொகுதியில் பிரசாரத்தை தொடங்குகிறார் விஜய்.
அத்தொகுதியில் விஜய் போட்டியிடலாம் கூறப்படும் நிலையில் அதற்கான முதற்கட்ட வேலைகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தொகுதியில் ஆளுங்கட்சியான திமுகவும் நேரடியாக களமிறங்குகிறது.
விஜய் பேசுகையில், இது வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டமல்ல, இது மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம்.
எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் நானே நிற்க முடியாது என்பதால் என் சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன்.
ஒவ்வொரு வேட்பாளரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்துள்ளேன், அவர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் பொறுப்பு.
மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் கூட்டணிக்கும் மட்டும் தான் போட்டி