மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு இருப்பதாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு தொடர்பான புகார்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன, மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் உட்பட பல்வேறு துறை அமைச்சர்கள் பல்வேறு காரணங்களை கூறிவந்தாலும் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய் சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு அலுவலகங்களில் ஆய்வு செய்தார், அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் மின்சார தேவை குறித்தும் உற்பத்தி குறித்தும் கேட்டறிந்தார்.