அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம் என்ற புதிய கட்சி தொடங்கினார் விஜய்யின் தந்தை!

vijay-india-master-party-father
By Jon Jan 04, 2021 01:49 AM GMT
Report

விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதிதாக அப்பா எஸ்.ஏ.சி. மக்கள் இயக்கம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

இன்று சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்நடைபெற்றது. இதில் விஜயின் தந்தை சந்திரசேகர் ,புதிதாக அப்பா எஸ். ஏ.சி என்ற கட்சியினை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பொது செயலாளராக ஜெயசீலனும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள், இந்த புதிய கட்சியில் இணையலாம் என நம்பப்படுகிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமையில் சாலிகிராமத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த், பனையூர் அலுவலகத்தின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகதகவல் வெளியகியுள்ளது.