முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்: காரணம் என்ன?
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி உடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, தியேட்டர்களில் பார்வையாளர் அனுமதியினை 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என நடிகர் விஜய் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று ஜனவரி 13 வெளியாக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது பட தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடனிருந்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து திரை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன, ஆனாலும் புதிய படங்கள் இன்னும் திரையரங்குகளில் இன்னும் வெளியாகவில்லை.
அதே சமயம் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதிமுக அரசினை நடிகர் விஜயும் விஜயினை அதிமுகவும் விமர்சித்து வரும் நிலையில், நடிகர் விஜய் முதல்வருடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.