முருகனை தொடர்ந்து ஷீரடி சாய்பாபா கோவிலில் விஜய்?

Vijay TVK
By Fathima Apr 29, 2026 06:15 AM GMT
Report

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 233 தொகுதிகளிலும் தனியாக களம் கண்டுள்ளது தமிழக வெற்றிக்கழகம்.

சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் என 2 தொகுதிகளிலும் களம் கண்டுள்ளார் விஜய்.

தேர்தல் எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

முருகனை தொடர்ந்து ஷீரடி சாய்பாபா கோவிலில் விஜய்? | Vijay In Saibaba Temple

இதற்கிடையே கடந்த சில நாட்களாக விஜய் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருகிறார், நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய், கடலில் குளித்து முடித்துவிட்டு முருகப்பெருமானின் விஸ்வரூப தரிசனம் செய்தார்.

அங்கு விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டதுடன் முருகனின் நினைவாக அவருக்கு வேல் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.

விஸ்வரூப தரிசனத்தில் முருகனிடம் வேண்டினால் வேண்டியதை அருள்புரிவார் என்பது ஐதீகம். தொடர்ந்து ஷீரடி சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.