களத்தில் விஜய்: தவெக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 25ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சிகள் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளன, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரத்திற்கான ஏற்பாடுகள் என அடுத்தடுத்த பணிகளால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் கரூர் சம்பவம், ஜனநாயகன் திரைப்படம் என தவெக தலைவர் விஜய் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறார், கடந்த ஒரு மாத காலமாக அமைதி காத்து வந்த நிலையில் வருகிற 25ம் திகதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது 25ஆம் திகதி காலை 10.30 மணிக்கு மாமல்லபுரத்தில் விஜய் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.