விஜய்க்காக விதிகள் தளர்வு செய்யப்பட்டதா?

Vijay
By Fathima Mar 16, 2026 03:34 AM GMT
Report

சிபிஐ விசாரணைக்காக சென்ற தவெக தலைவர் விஜய்க்காக விதிமுறைகள் மாற்றப்பட்டதா என பேச்சு கிளம்பியுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக மூன்றாவது முறையாக சிபிஐ விசாரணைக்காக சென்றார் விஜய்.

நேற்று காலை 11 மணிக்கு அவரிடம் விசாரணை தொடங்கிய நிலையில், அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

காவல்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள் தொடர்பிலும் விசாரணை நடந்ததாக தெரிகிறது.

விஜய்க்காக விதிகள் தளர்வு செய்யப்பட்டதா? | Vijay In Cbi Investigation

சுமார் 7 மணிநேரம் நீடித்த விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார், சிபிஐ தலைமையகத்தில் இருந்து தனது காரின் சன் ரூஃப் கண்ணாடி பகுதியில் நின்று கொண்டே தனது கையை அமைத்தார்.

அப்போது சிபிஐ தலை மையகத்துக்கு வெளியே கூடியிருந்த விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

இதுவரையிலும் எத்தனையோ தலைவர்கள் வந்து சென்ற போதிலும் முதன்முறையாக விஜய் திறந்தவெளியாக நின்று வெளி செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இரண்டாவதாக முறையாக விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜனரான போது, இரவு 7 மணிக்கு தனி விமானம் பறக்க அனுமதியில்லை என கூறி விமான போக்குவரத்துத் துறை அனுமதி மறுத்தது.

ஆனால், நேற்று விசாரணைக்கு ஆஜரான பின்பு வெளியே வந்த விஜய்யின் தனி விமானம் இரவு 8 மணிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது, இப்படியான தொடர் சம்பவங்கள் விஜய்க்கு மட்டும் விதிமுறைகள் மீறப்பட்டதாக என்ற விவாதத்தை கிளப்பியது.