இடைத்தேர்தலில் தவெக போட்டி.. நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய அட்வைஸ் - என்ன தெரியுமா?
இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுவார்களா என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தவெக
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தவெக தலைவர் விஜய், கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி கட்சிகொள்கை எதிரி,
அரசியல் எதிரி குறித்தும் தெளிவுபடுத்தினார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என கூறி தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
விஜய்
தொடர்ந்து அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. எனவே இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால், விஜய் இம்முறை களம் காண்பாரா என எதிர்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய விஜய், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும்,
இடைத்தேர்தல் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் கட்சிக்குள் எந்த சலசலப்புக்கும் இடம் கொடுக்காமல், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என நிர்வாகிகளை விஜய் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம், பூத் கமிட்டி என கட்சியை பலப்படுத்த அனைத்து முயற்ச்சிகளிலும் தவெக பயன்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி. வருகின்ற பிப்ரவரி மாதம் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.