வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார் நடிகர் விஜய்!

Vijay Tamil nadu Thoothukudi Thalapathy Vijay Makkal Iyakkham Tirunelveli
By Jiyath Dec 30, 2023 08:02 AM GMT
Report

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார் நடிகர் விஜய்.

வெள்ள பாதிப்பு 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதி கனமழை பெய்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார் நடிகர் விஜய்! | Vijay Helps Flood Affected People Nellai Tuticorin

இதனால் அம்மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் சேதங்களும், ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்து போன்ற துயரங்கள் ஏற்பட்டன. இதனையடுத்து தமிழக அரசு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கி வருகிறது.

நடிகர் விஜய் உதவி 

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகளை நடிகர் விஜய் நேரில் வழங்கினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார் நடிகர் விஜய்! | Vijay Helps Flood Affected People Nellai Tuticorin

இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். பின்னர் அங்கிருந்து நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள கே.டி.சி.நகர் தனியார் திருமண மண்டபத்திற்கு புறப்பட்டார். இதனையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.