காமராஜர் ஆட்சி போல்... விஜய் ஆட்சியிலும் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகள் - ப. சிதம்பரம் புகழாரம்
தமிழக வெற்றிக் கழக தலைவரும், முதல்வருமான விஜய் ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது, அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் மாறுதல் உள்ளிட்டவைக்கு லஞ்சம் தவிர்க்கப்படுகிறது.இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவையொட்டி சுமார் 2,000 மாணவர்கள் இணைந்து காமராஜரின் உருவப்படத்தையும், "லஞ்சம் தவிர் – நெஞ்சம் நிமிர்" என்ற வாசகத்தையும் வடிவமைத்தனர்.
முதல்வருக்கு புகழாரம்
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காமராஜர் ஆட்சிக் காலத்தில் லஞ்சமற்ற நிர்வாகம் நடைபெற்றதாகக் குறிப்பிட்டார்.

தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில், பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அரசு பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் மற்றும் பணிமாறுதல் உள்ளிட்ட பணிகளில் லஞ்சம் தவிர்க்கப்படுவதாகவும் பாராட்டுத் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் மற்ற அரசு துறைகளிலும் விரிவுபடுத்தப்பட்டு, தமிழ்நாட்டில் லஞ்சமற்ற நிர்வாகம் முழுமையாக அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.