தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் விஜய்: எத்தனை கோடி தெரியுமா?
vijay
By Fathima
தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற சாதனையை படைக்கவிருக்கிறார் இளையதளபதி விஜய்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகும் பீஸ்ட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஜய்யின் 66வது படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கு பட அதிபர் தில்ராஜூ தயாரிக்கும் இப்படத்தை ஹிட் பட இயக்குனரான வம்ஷி இயக்கவிருக்கிறார்.
இதில் விஜய்யின் சம்பளம் மட்டும் 120 கோடி என கூறப்படுகிறது, இதன்மூலம் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அந்தஸ்தை பெறவிருக்கிறார்.