விஜய்க்கு எதிராக கிளம்பிய ‘பீட்டா'... புறாவால் கிளம்பிய புதிய புகார்!
நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழக தேர்தல் பிரசாரத்தின் போது புறாக்களை பறக்கவிட்டமைக்காக அவருக்கு கண்டனம் தெரிவித்து PETA அமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக பல வருடங்களுக்கு முன்பு சிக்கலை ஏற்படுத்திய அதே அமைப்பு தான் தற்போது விஜய்க்கு எதிராக வந்திருக்கிறது.

இதுதொடர்பாக 'பீட்டா இந்தியா'' எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ''தேர்தல் பிரசாரத்தின்போது புறாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த புறாக்களின் உடலில் தவெக கொடியின் வண்ணம் பூசப்பட்டுள்ளது. அரசியலுக்கு பறவைகள், விலங்குகளை பயன்படுத்த வேண்டாம். விலங்குகள், பறவைகள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவை அல்ல'' என கூறப்பட்டுள்ளது. அதனால் விஜய்க்கு எதிராக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.