விஜய் பட இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

covid Lokesh Kanagaraj vijay master
By Jon Mar 30, 2021 02:10 AM GMT
Report

விஜய் பட இயக்குனருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநகரம் படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கார்த்தியின் கைதி, விஜய் நடித்த மாஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக முன்னேறியவர். மாநகரம் படத்தை இயக்கி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து கார்த்தியின் கைதி, விஜய் நடித்த மாஸ்டர் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். சட்ட மன்ற தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். உதவியாளர்களுடன் விக்ரம் படப்பிடிப்புக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறேன்.

விரைவில் பலத்துடன் திரும்பி வருவேன்'' என்று கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் விரைவில் குணமடைய திரையுலகினரும் அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Gallery