2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு

Vijay Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Karthikraja Apr 05, 2026 05:31 AM GMT
Report

தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு | Vijay Files Additional Affidavit In 2 Constituency

இதற்கான வேட்புமனுவை 2 தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் வயது மற்றும் சில தகவல்கள் முரண்பாடாக இருந்தது.

பெரம்பூரில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தனக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

சுந்தர். சி சொத்து விபரங்கள்

சுந்தர். சி சொத்து விபரங்கள்

திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மதுரை மாநாடு மற்றும் கொளத்தூரில் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறியதாக பதிவான 2 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வழக்குகளை சேர்த்து பெரம்பூரில் கூடுதல் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். 

2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு | Vijay Files Additional Affidavit In 2 Constituency

மேலும், தனது சொத்து விவரங்களில் கூடுதலாக ரூ.6 கோடி மதிப்புள்ள டாடா கேரவன் பிரச்சார வாகனத்தையும் இணைத்துள்ளார்.

இதனையடுத்து, திருச்சி கிழக்கிலும் இந்த வாகனத்தை இணைத்து கூடுதல் பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். 

ஆனால், இந்த கூடுதல் பிராமண பத்திரங்களை விஜய் நேரடியாக சென்று தாக்கல் செய்யாமல், தனது முகவர்கள் மூலம் தாக்கல் செய்துள்ளார்.

இதன் மூலம், ரூ.404 கோடியாக இருந்த விஜய்யின் சொத்துமதிப்பு ரூ.410 கோடியாக அதிகரித்துள்ளது.

வேட்புமனு பரிசீலனைக்கு முன்பாக இந்த திருத்தங்கள் சரி செய்யப்பட்டுள்ளதால் வேட்புமனு ரத்தாக வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், ஒரு கட்சி தலைவரின் வேட்புமனுவிலே இத்தனை குளறுபடிகள் உள்ளதா என சமூகவலைத்தளங்கள் விமர்சனம் எழுந்துள்ளது.