தந்தையின் இரண்டாம் திருமணம்.. கண்கூடாக பார்த்த விஜய் - வெளியான புகைப்படம்!
விஜய் தந்தையின் இரண்டாம் திருமண புகைபடம் வெளியாகியுள்ளது.
S.A சந்திரசேகர்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் இயக்குநர் S.A சந்திரசேகர் . இவர் 1981-ம் ஆண்டு வெளிவந்த "சட்டம் ஒரு இருட்டறை" என்ற படத்தின் மெல்லாம் தமிழ் சினிமாவில் இயக்குனாராக அறிமுகமானார்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கியுள்ளார். பல வருடங்களாக இயக்குனராக பணியாற்றிவந்த இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
2ம் திருமணம்
இந்நிலையில், கடந்த 1973-ம் ஆண்டு ஷோபாவை இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டார் எஸ்.ஏ. சந்திரசேகர். பின்னர், 1974-ம் ஆண்டு இவர்களுக்கு மகனாக விஜய் பிறந்துள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் கிறிஸ்துவ மாதத்தை சேர்ந்தவர், ஆனால் அவரது தாய் ஷோபா இந்து மாதத்தை சேர்ந்தவர்.
இந்து முறைப்படி திருமணம் நடந்து முடிந்த பின் மீண்டும் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்யவேண்டும் என எஸ்.ஏ.சி இடம் ஷோபா கூறியுள்ளார்.
இதனால் நடிகர் விஜய்க்கு 6 வயது இருக்கும்போது எஸ்.ஏ.சி - ஷோபா இருவரும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டாவது திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.