எஸ்.ஏ.சந்திரசேகரால் விஜய்க்கு நேர்ந்துள்ள சிக்கல் - அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் புதிய யூடியூப் சேனல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கருத்து வேற்றுமை காரணமாக நடிகர் விஜய்யும், அவரது தந்தையும் எஸ்.ஏ.சந்திரசேகரும் சமீப காலமாக பேசிக் கொள்வதில்லை. இதனை பலமுறை எஸ்.ஏ.சி. வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகர் விஜய் ஆரம்ப காலங்களில் திரையுலகில் கால் பதிக்க காரணமாக இருந்த எஸ்.ஏ. சந்திரசேகர் அவரை அரசியலுக்குள் இழுக்க பல விதங்களிலும் முயற்சித்து வருகிறார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு, சண்டை என வெளிப்படையாக நடந்த நிகழ்வுகள் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்ற நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் தனது புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் அனுமதி வழங்கியிருந்தார். இந்நிலையில் எஸ்ஏசி புதிதாக ஒரு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் சினிமா பற்றிய தன்னுடைய அனுபவத்தையும் தான் கடந்து வந்த பாதையை பற்றியும் பேச இருப்பதாகவும் கூறப்பட்டாலும் விஜய் பற்றிய பல முக்கியமான தகவல்களையும் அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் எஸ்.ஏ. சந்திரசேகர் யூடியூப் சேனல் தொடங்கினால் அது, தளபதி விஜய்க்கு மிகப்பெரிய தலைவலியாக அமையும் என ரசிகர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் இருவருக்குள்ளான விரிசல் பெரிதாக கூடாது எனவும் அவர்கள் கேட்டுக் கொ்ண்டுள்ளனர்.