விஜய்- திவ்யா சத்யராஜ் சர்ச்சை.., தங்கைக்கு எதிரான சிபி சத்யராஜின் வைரல் பதிவு

Sibi Sathyaraj Vijay
By Yashini Mar 04, 2026 10:05 AM GMT
Report

திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் தவெக தலைவர் விஜய்யை கேள்வி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், "நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பே என் அம்மா பெயரில் அறக்கட்டளை தொடங்கி, ஏழைகளுக்கு சத்தான உணவு, வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கி வருகிறேன்.  

நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்தீர்கள் என்பதை பட்டியலிட்டு சொல்லுங்கள்" என்று நேரடியாக விஜயிடம் கேள்வி எழுப்பினார்.

விஜய்- திவ்யா சத்யராஜ் சர்ச்சை.., தங்கைக்கு எதிரான சிபி சத்யராஜின் வைரல் பதிவு | Vijay Fans Share Actor Sibi Sathyaraj Insta Story

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிட்டனர்.

சிலர் திவ்யாவை விமர்சித்ததுடன், அவரை உருவகேலி செய்த சம்பவங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. 

இந்நிலையில், திவ்யாவின் அண்ணனும் நடிகருமான சிபி சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

  

அந்த வீடியோவில் அமைதிப்படை படத்தில் சத்யராஜ் பேசிய "மணியா, நீ வரலாறு தெரிஞ்சுக்கோணும்" என்ற பிரபல வசனம் இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து, விஜய் பல ஆண்டுகளாக செய்த நற்பணிகள், உதவிகள், செய்தித்தாள் கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் இணைக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பார்த்த தவெகவினர், சிபி தான் உண்மையான விஜய் ரசிகர், தங்கைக்கு புரியும்படி அண்ணன் பதில் சொல்லிவிட்டார் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.