“விஜய்யை குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்குது” ... போஸ்டர் அடித்து குமுறிய ரசிகர்கள்
நடிகர் விஜய்யை குறை சொல்பவர்களை விமர்சித்து போஸ்டர் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் தளபதி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய்யின் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
இதனால் விஜய்யை திரையுலகைச் சேர்ந்தவர்களும், அவரை பிடிக்காதவர்களும் இணையத்தில் கடுமையாக கிண்டல் செய்தும் விமர்சித்தும் வருகின்றனர்.
இவர்களின் பேச்சுகளை பார்க்கும் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்க தயங்கவும் இல்லை. இந்நிலையில் மதுரையில் ராயல் கிங் விஜய் பேன்ஸ் ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது.
அதில், “இவர் ஏதாவது அவார்டு வாங்குனா; அது சாதாரண அவார்டு என்பார்கள்... இவர் ஏதாவது உதவி செஞ்சா பப்ளிசிட்டிக்காக என்பார்கள்... மக்களுக்காக ஏதாவது குரல் கொடுத்தால் அரசியல் ஆசை என்பார்கள்... எதுவும் மக்கள் பிரச்சனையில் தலையிடாமல் இருந்தால் கோடியில் புரளும் நடிகர் வாயை திறக்காமல் உள்ளார் என்பார்கள்... படம் நல்லா இருந்தா இது எங்கள் மதத்திற்கு எதிராக படம் பண்ணுகிறார்... டைரக்டர் காபி..லாஜிக் இல்லாத படம் , இப்படி என்ன பண்ணாலும் இவரை குறை சொல்றதுன்னே ஒரு கூட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.