அண்ணாமலைக்கு ஆதரவான மக்கள் இயக்கம் - பதறிப்போன புஸ்ஸி ஆனந்த்
அண்ணாமலையின் பாதயாத்திரையின் போது, விஜய் ரசிகர் மன்றத்தினர் பங்கெடுத்து கொண்ட வீடியோக்கள் வெளியான நிலையில், அது குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
பாதயாத்திரை
வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றார். "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் அவர் மேற்கொண்ட வரும் இந்த பாதயாத்திரைக்கு பாஜக தொண்டர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வருகின்றனர்.
விஜய் மக்கள் இயக்கம்
இதில் நேற்று மதுரையில் விஜய் மக்கள் இயக்கித்தினர் தங்களது மன்ற கொடியுடன் அண்ணாமலையை நேரில் சந்தித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின. இது வைரலான நிலையில், தற்போது அது குறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
“தளபதி விஜய் மக்கள் இயக்க கொடியோடு மாற்றுக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக செய்திகளில் வெளியான நபர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் எந்த பொறுப்பிலும் இல்லை. மற்றும் அவர்களுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என புஸ்ஸி ஆனந்த் ட்வீட் செய்துள்ளார்.