மாற்று திறனாளி ரசிகரை தன் கைகளால் தூக்கிய நடிகர் விஜய் - வைரலாகும் மாஸ் புகைப்படம்

Vijay Viral Photos
By Nandhini Dec 13, 2022 12:52 PM GMT
Report

மாற்று திறனாளி ரசிகரை தன் கைகளால் தூக்கிய நடிகர் விஜய்யின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வாரிசு படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் நடிப்பில் வெளியாகும் படங்களின் முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டால் அவை யூ-டியூப்பில் பெரிய சாதனையைப் படைத்து விடும்.

இவர் பாடலுக்கென்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அவருடைய முந்தைய பட பாடல்களின் சாதனைகளை எப்படியும் லேட்டஸ்ட்டாக வெளியாகும் பாடல்கள் முறியடித்துவிடும்.

சமீபத்தில் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளாக வெளியான 'ரஞ்சிதமே' பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 18.5 மில்லியன் பார்வைகளையும், 1.3 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

vijay-fans-meeting-viral-photo

மாற்று திறனாளி ரசிகரை தன் கைகளால் தூக்கிய விஜய்

நடிகர் விஜய் கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டமாக தனது ரசிகர்களை சென்னை புறநகர் பகுதியில் உள்ள பனையூரில் விஜய் மக்கள் இயக்க அலுவலத்தில் சந்தித்தார். அதில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

2-வது கட்டமாக இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தார்.

அப்போது, நடிகர் விஜய்யை சந்திக்க மாற்று திறனாளி ரசிகர் ஒருவர் வந்தார். அவரை நடிகர் விஜய் தன் கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.