கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய விஜய் ரசிகர்கள்
மதுரையில் ஊரடங்கால் தவிக்கும் 100 கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு விஜய் ரசிகர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளனர்.
கடந்தாண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவியதில் இருந்தே பல மாதங்களாக நிகழ்ச்சிகள், விழாக்கள் சரிவர நடைபெறாமல் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உணவு கூட இல்லாமல் கிராமிய கலைஞர்கள் தவித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் 100 கிராமிய குடும்பத்தினர் குடும்பத்தினருக்கும் தலா 10 கிலோ அரிசி, காய்கறி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டினர். பொருட்களை பெற்றுக்கொண்ட நாடகம் மற்றும் நடன கலைஞர்கள் இசை வாத்தியம் மூலமாகவும் நடனம் மூலமாகவும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.