Leo: குழந்தைக்கு விஜய் பெயர், திரையரங்கில் நிச்சயதார்த்தம் - தெறிக்கவிடும் ரசிகர்கள்!
லியோ படம் வெளியானதை முன்னிட்டு ரசிகர்களின் செயல் கவனம் பெற்று வருகிறது.
லியோ வெளியீடு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்டவற்றிலும் வெளியாகி உள்ளது.
அந்த வகையில், கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு சென்ற கர்ப்பிணி ஒருவர் லியோ படத்தை பார்த்துள்ளார். 7 மாத கர்ப்பமாக உள்ள அவர் தனக்குப் பிறக்க உள்ள குழந்தைக்கு விஜய் என்று என்று பெயர் சூட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் உற்சாகம்
மேலும், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தீவிர விஜய் ரசிகர். இன்று லியோ முதல் காட்சியின் போது திரையரங்கில் தனது காதலியான மஞ்சுளா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
தொடர்ந்து, விஜய் தான் தனக்கு எல்லாமே. அதனால் தான் அவர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.