பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்காக காலை உணவு திட்டம் 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தவெக அறிவித்தது.
இதற்காக 2026- 27ம் பட்ஜெட்டில் கூடுதலாக 217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.
சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இன்று முதல் நாள் காலை உணவுத்திட்டத்தில் சாம்பார், வெண்பொங்கல், சர்க்கைப் பொங்கல் ஆகிய உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்நிலையில் ஏற்கனவே உள்ள உணவுகளுடன் புதிய வகை உணவுகளை சேர்க்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.