28ம் தேதி முதல் விஜய் பிரசாரம்

Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 26, 2026 03:46 AM GMT
Report

முதன்முறையாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவுள்ள தமிழக வெற்றி கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்குகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர் அறிவிப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாகும் என கூறப்படுகிறது.

28ம் தேதி முதல் விஜய் பிரசாரம் | Vijay Election Campaign In Perambur

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது, தொடர்ந்து பிரசாரத்தை பெரம்பூரிலிருந்தே விஜய் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் பெரம்பூர் தொகுதி தனி கவனம் பெற்று வரும் நிலையில், அவரை தோற்கடிக்க ஆளும் கட்சி தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 28ம் தேதி முதல் விஜய் தன்னுடைய பிரசாரத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. இதற்கான முழு பாதுகாப்பையும் வழங்கு கோரி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனை பட் நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் சந்தித்து மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.