குழந்தைகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடிய முதல்வர் விஜய்

Vijay schools
By Karthikraja Nov 13, 2026 05:42 AM GMT
Report

cm vijay distribute cake to school kids for childrens day: கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு கேக் வழங்கிய முதல்வர் விஜய்

நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்துள்ளார்.

குழந்தைகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடிய முதல்வர் விஜய் | Vijay Distribute Cake To School Kids Childrens Day

சென்னை கொளத்தூரில் உள்ள அரசுபள்ளிக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு ஒவ்வொரு குழந்தைகளின் இருக்கைக்கும் சென்று, கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கி குழந்தைகள் தினத்தை கொண்டாடினார்.  

கரூர் விபத்தின் போது விஜய்க்கு ராகுல் காந்தி சொன்ன அறிவுரை - மாணிக்கம் தாகூர் பேச்சு

கரூர் விபத்தின் போது விஜய்க்கு ராகுல் காந்தி சொன்ன அறிவுரை - மாணிக்கம் தாகூர் பேச்சு

ஒரு சில குழந்தைகள் பாரதியார், வேலுநாச்சியார் வேடமிட்டு முதல்வரை வரவேற்றனர். சில குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் கேக் ஊட்டி விட்டு மகிழ்ந்தார். 

குழந்தைகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடிய முதல்வர் விஜய் | Vijay Distribute Cake To School Kids Childrens Day

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மாணவர்களுக்கு ரூ.9.27 கோடி செலவில் இந்த கேக் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப் பட உள்ளன. 

குழந்தைகளுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடிய முதல்வர் விஜய் | Vijay Distribute Cake To School Kids Childrens Day

இதற்காகப் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்றே கேக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

மேலும், கேக்குகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்கவும், அவற்றைப் பாதுகாப்பான குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளில் சேமிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.