விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா ரகசிய திருமணமா? தீயாய் பரவும் புகைப்படம் - ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் ரகசிய திருமணம் செய்து விட்டதாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா
தெலுங்கில் முன்னணி நடிகராக விஜய் தேவரகொண்டா வலம் வருகிறார். இவர் பிரபல நடிகை ராஷ்மிகாவுடன் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் இணைந்து நடித்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்டிரி தாறுமாறாக இருந்தது. இப்படம் வசூலில் சாதனை படைத்தது.
இதனையடுத்து, இவர்கள் இருவரும் மீண்டும் ‘டியர் காம்ரேட்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடிக்கும் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஏனென்றால், அப்படத்தில் ஒரு லிப் லாக் காட்சி அட்டகாசமாக அமைந்திருந்தது. ஆனால், இருவரும் நாங்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்கள்தான் என்றும், எங்களிடம் காதல் கிடையாது என்று கூறி வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் விடுமுறையை கொண்டாட மாலத்தீவுக்கு ஒன்றாக சென்றனர். இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் மாலத்தீவுக்கு சென்றனர். ஜோடியாக மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஏறியதால் இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாக பேசப்பட்டு வருகிறது.
ரகசிய திருமணம்?
இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவும், ரஷ்மிகாவும் திருமணக் கோலத்தில் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த அவர்களது ரசிகர்கள் சற்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால், அதன் பிறகுதான் தெரிந்தது, யாரோ எடிட் செய்து இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் என்று.
எப்படியோ இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.