ராஷ்மிகா மந்தனாவுடன் திருமணமா? - நடிகர் விஜய் தேவரகொண்டா பதில்
தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.
இருவரும் ஜோடியாக டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் ஆகிய படங்களில் ஒன்றாக நடித்து ரசிகர்கள் விரும்பும் ரீல் ஜோடியாக மாறினர்.
தமிழில் ராஷ்மிகா கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி வசூல் குவித்த புஷ்பா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. ஆனால் இந்த செய்தியை ராஷ்மிகா அபோது மறுத்தார்.
இந்த நிலையில் ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொள்ள தயாராகி இருப்பதாகவும், இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாகவும் தெலுங்கு இணையதளங்களில் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவியது.
திருமண தேதியை ரகசியமாக வைத்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.
இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா சமூக வலைத்தளமான ட்விட்டரில்,
“வழக்கம் போல் கிசுகிசுக்கப்படுகிற செய்தி தான் இது. இந்த செய்தியை நாங்கள் ரசிக்கிறோம்” என பதில் அளித்திருக்கிறார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8
சுரேஷ் சலேக்கு ஆபத்து ஏற்பட்டால் அநுர அரசே முழுப் பொறுப்பு : விடுக்கப்பட்டுள்ள எசச்சரிக்கை IBC Tamil
நீதிபதியின் வருகை நுழைவாயிலில் இரகசியமாக நுழைந்த ஹேமரத்தன தேரர்! ஆரம்பமாகிறது அடுத்த விசாரணை IBC Tamil