717 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போட்ட முதல்வர் விஜய் - நடிகர் விஷால் பெருமிதம்

Vijay Vishal Tamil nadu Viral Video TVK
By Vinoja May 12, 2026 04:32 PM GMT
Report

நடிகர் விஷால் முதலமைச்சர் விஜய் செய்படுத்தும் அதிரடியான மாற்றங்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் கூறி தனது சமூக ஊடக பக்கங்களில் காணொளி வெளியிட்டு பாராட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், 717 மதுக்கடைகள் ஒரே தடவையில், மூடப்படுவது வரவேற்கத்தக்கது எனவும், இது மிகப்பெரிய மாற்றம் என்றும் குறிப்பிட்டு நடிகர் விஷால் காணொளி வெளியிட்டு தனது பாராட்டுக்களை முதல்வருக்கு தெரிவித்துள்ளார்.