திருமணத்தில் தளபதி குடும்பம்; வெறித்தனமாக ஆடிய மகள் திவ்யா - ரசித்து பார்த்த விஜய்!

Vijay
By Sumathi Aug 21, 2023 05:36 AM GMT
Report

விஜய் மகள் சாஷா நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திவ்யா சாஷா

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கிறார்.

திருமணத்தில் தளபதி குடும்பம்; வெறித்தனமாக ஆடிய மகள் திவ்யா - ரசித்து பார்த்த விஜய்! | Vijay Daughter Dance Video In Marriage

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகிறது.

வைரல் வீடியோ

இதற்கிடையில், திரிஷாவுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தது.

இந்நிலையில், விஜய் ஒரு திருமணத்திற்கு தனது மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் சாஷா ஆகியோருடன் விஜய் சென்ற வீடியோதான் அது.

அந்த திருமணத்தில் சாஷா அட்டகாசமாக நடனம் ஆடுகிறார். இதுகுறித்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.