விஜய்யால் உதயநிதிக்கு அனுமதி மறுப்பு - முந்திக் கொண்ட தவெக
தவெக தலைவர் விஜய் நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யால் உதயநிதிக்கு அனுமதி மறுப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
தவெக தலைவர் விஜய், நேற்று முன்தினம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதை தொடர்ந்து இன்று காரைக்குடியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்துள்ள அவர், அங்கிருந்த சாலை மார்க்கமாக காரைக்குடி செல்ல உள்ளார்.
இதைத்தொடர்ந்து நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தார். தற்போது விஜய் நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கடலூரில் நாளை திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் அனுமதி கேட்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் விஜய்க்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.