விஜய்யின் கடலூர் பரப்புரை ரத்து
தவெக தலைவர் விஜய் கடலூர் பிரசாரத்தை இரண்டாவது முறையாக ரத்து செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
முதன்முறையாக தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் விஜய், பெரம்பூரில் பிரசாரத்தை தொடங்கினார்.
தொடர்ந்து திருச்சி, நெல்லை, தூத்துக்குடி என பிரசாரம் மேற்கொண்ட நிலையில் நேற்று காரைக்குடியில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் இன்று கடலூர் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே 9ம் தேதி நடக்கவிருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து கடலூருக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டி இருப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் எனக்கருதி பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
