விஜய் மீது வன்மமா..? ஜவான் ஆடியோ லான்ச் சர்ச்சை...சன் டிவி விளக்கம்..?

Vijay Sun TV Shah Rukh Khan Atlee Kumar
By Karthick Sep 04, 2023 03:00 PM GMT
Report

ஜவான் படத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்ட போது, நடிகர் விஜய் குறித்தான வசனங்கள் அனைத்தும் எடிட் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து சன் டிவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜவான்  

நடிகர் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே நடிப்பில் அட்லீ இயக்கத்தில் அனிருத் இசையில் வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் "ஜவான்". தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பணிபுரிந்துள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

vijay-controversy-sun-tv-responds

இது கலந்து கொண்ட படத்தின் நடிகர் ஷாருக் கான், இயக்குனர் அட்லீ, நடிகை பிரியாமணி ஆகியோர் நடிகர் விஜய் குறித்தும் "லியோ" படம் குறித்து பேசியிருந்தனர். இந்த வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியாகி மாபெரும் வைரலானது.  

எடிட் செய்ததா சன் டிவி?

இந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறுக்கிழமை அன்று சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது விஜய் குறித்தும் லியோ படம் குறித்தான அனைத்து காட்சிகளும் எடிட் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது. இது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் வெளியான "ஜெயிலர்" படத்தின் ஆடியோ லாஞ்சில் நடிகர் ரஜினி சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து காக்கா, கழுகு கதை கூறிய நிலையில், அது விஜய் ரசிகர்களிடம் பெரும் கண்டனங்களை பெற்றது.

vijay-controversy-sun-tv-responds

அதனை அடுத்து தான் இந்த நிகழ்ச்சியில் விஜய் குறித்தான காட்சிகள் இடம்பெறவில்லை என விஜய்யின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை வைத்து சன் பிக்சர்ஸ் தன்னுடைய வன்மத்தை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.   

சன் டிவி விளக்கம்

இந்நிலையில் தான் தற்போது சன் டிவி நிறுவனம் தரப்பில் இந்த விவகாரத்தில் விளக்கமளித்துள்ளதாக சமூகவலைத்தளத்தில் கருத்துக்கள் சில வெளியாகியுள்ளன. அதில் ஜவான் இசை வெளியீட்டு விழாவில் சன் டிவி பாட்னர் இல்லையென்றும், அந்நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ப்ரொடக்‌ஷன் டீம் தான் எடிட் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

vijay-controversy-sun-tv-responds

இரண்டு மணி நேரம் மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டதால், அட்லீ பேசியது எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக சன் பிக்சர்ஸின் அடுத்த படத்தை அட்லீ இயக்கவுள்ளதாகவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.