பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்?

Thamizhaga Vetri Kazhagam
By Fathima Feb 22, 2026 02:59 PM GMT
Report

சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதி தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டனர்.

இதில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்? | Vijay Constituency In Perambur

இதனை ஆதவ் அர்ஜீனா முன்மொழிந்தார், அவர் பேசுகையில், எங்கு வறுமை, ஏழ்மை அதிகம் உள்ளதோ எங்கு வளர்ச்சி இல்லையோ எங்கு குடிசை பகுதிகள் அதிகம் உள்ளதோ, பெண்கள் பாதுகாப்பு குறைவாக உள்ளதோ அங்கு நிற்பேன் என கூறினார்.

திமுக கோட்டையாக உள்ள வடசென்னையில் தலைவர் களமிறங்குகிறார் என தெரிவித்தார்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டால் பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக திமுக-வை சேர்ந்த ஆர்டி சேகர் உள்ளார், 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 52.93 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

1962க்கும் பின்னர் நடந்த 14 தேர்தல்களில் 4 தேர்தலை தவிர 10 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்? | Vijay Constituency In Perambur