யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி - தவெக தலைவர் விஜய் கண்டனம்

Vijay Tamil nadu Chennai
By Karthikraja Nov 13, 2024 03:30 PM GMT
Report

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்ள வேண்டுமென தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மருத்துவருக்கு கத்திக்குத்து

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

chennai doctor

மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. 

மருத்துமனையில் கத்திக்குத்து - வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்

மருத்துமனையில் கத்திக்குத்து - வேலைநிறுத்தத்தை தொடங்கிய மருத்துவர்கள்

விஜய் கண்டனம்

சென்னையின் முக்கிய மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

tvk vijay

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்தோம்.

பாதுகாப்பு இல்லாத ஆட்சி

இந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது. சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.