டி.வி. சீரியலில் நடிக்கப்போகும் எஸ்.ஏ.சந்திரசேகர்.... - எந்த சீரியல்ன்னு தெரியுமா? இதோ..

Chandrasekhar Vijay
By Nandhini Feb 06, 2023 02:49 PM GMT
Report

பிரபல நடிகர் விஜய் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரையில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வாரிசு’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி 11ம் தேதி வாரிசு திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.

விஜய்யின் ‘தளபதி - 67’

‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர். மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

தளபதி 67 படத்தின் Title Reveal Promo வீடியோவை படக்குழுவினர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

vijay-chandrasekhar-tamil-cinema

சின்னத்திரையில் நடிக்கப்போகும் விஜய் அப்பா

இந்நிலையில், விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சின்னத்திரையில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் கலர்ஸ் சேனலுடன் சேர்ந்து புது சீரியலை தயாரிக்க உள்ளதாம். விசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சம்சாரம் அது மின்சாரம் படத்தை தான் சீரியலாக எடுக்க போகிறார்களாம்.

கிழக்கு வாசல் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த சீரியலில் விசு கதாபாத்திரத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

தற்போது இது குறித்த தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் இது எல்லாம் சரிதான். நீங்கள் விஜய் சாரும், ஒன்றாக இணைந்துவிடுங்கள் என்று கோரிக்கை வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.