அடுத்த சர்ச்சையில் சிக்கிய விஜயின் கார்

actorvijayredcarvoting vijaycastedvote
By Swetha Subash Feb 20, 2022 11:30 AM GMT
Report

நடிகர் விஜய் தேர்தலுக்கு வாக்களிக்க வருவதே பரபரப்பு செய்தியாக இருந்து வருகிறது.

நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சிவப்பு நிற காரில் வந்தும் கருப்பு நிற மாஸ்க் அணிந்ததும் பரபரப்பாக பேசப்பட்ட சூழலில்,

அவர் வந்த கார் இன்சூரன்ஸ் புதுப்பிக்காமலே உள்ளது என்ற தகவலும் வெளியாகியது. நடிகர் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

அப்போது அவர் வந்த சைக்கிள் குறியீடாக பேசப்பட்டது. அது போல் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நேற்று காலையிலேயே வாக்களித்திட சிவப்பு நிற காரில் வந்தார்.

அவர் வந்த சிவப்பு நிற காருக்கு வாகன காப்பீடு இல்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

வாக்களிக்க நடிகர் விஜய் TN07-CS7967 என்ற எண்ணுடைய காரில் வந்தார்.

அந்த கார் ஜோசப் விஜய் என்ற பெயரில் பதிவாகியுள்ளது. கடந்த 2020 மே 26ம் தேதி அந்த காருக்கான வாகன காப்பீடு முடிந்த நிலையில் இதுவரை புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.