இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்: வரலாறு சொல்வது என்ன?

Vijay Thamizhaga Vetri Kazhagam
By Fathima Mar 30, 2026 08:24 AM GMT
Report

இரண்டு தொகுதிகளில் விஜய்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026ல் தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 33(7) ஒரு வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம்.  

1991ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் வென்றதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய் களமிறங்குகிறார்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்: வரலாறு சொல்வது என்ன? | Vijay Candidate In Two Constituency

அத்தேர்தலின் போது, ஜெயலலிதா அவர்கள் பர்கூர் மற்றும் காங்கேயம் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேசிய அளவில் இரண்டு தொகுதி

தேசிய அளவில்  நரேந்திர மோடி, ராகுல்காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் ஒரே தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கின்றனர்.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராகுல் காந்தி, பின்னர் வயநாட்டில் ராஜினாமா செய்தார்.

இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்: வரலாறு சொல்வது என்ன? | Vijay Candidate In Two Constituency